News

அமெரிக்காவில் எலான் மஸ்க், டிரம்புக்கு எதிராக வெடித்த போராட்டம்

 

அதிபர் டிரம்ப் கடந்த 2-ம் தேதி பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார்

இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் டிரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

இந்நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கோடீஸ்வரர் எலான் மஸ்க் இருவருக்கும் எதிராக அமெரிக்கா முழுவதும் பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஹான்ட்ஸ் ஆப் என்ற எதிர்ப்பு பேரணி அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பேரணியில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களும், உள்ளூர் ஆதரவாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப் பெரிய பேராட்டங்களில் இதுவும் ஒன்று. இது அமெரிக்கர்களிடையே அதிகரித்து வரும் விரக்தியைக் குறிக்கிறது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கோடீஸ்வரர் எலான் மஸ்க் இருவருக்கும் எதிராக அமெரிக்கா முழுவதும் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஹான்ட்ஸ் ஒஃப் என்ற குறித்த எதிர்ப்பு பேரணி அமெரிக்காவின் 50 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த போராட்ட பேரணியில் உலகெங்கிலும் உள்ள, அதாவது அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களும் உள்ளூர் ஆதரவாளர்களும் பெர்லின், பிராங்பேர்ட், பாரிஸ் மற்றும் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப் பெரிய பேராட்டங்களில் இதுவும் ஒன்று என சர்வதேச ஊடகமான அல் ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.

ட்ரம்புக்கு எதிராக வெடித்த சர்வதேச ரீதியிலான போராட்டம் .. அமெரிக்கர்கள் மத்தியில் அதிகரிக்கும் விரக்தி | Hands Off Protest Against Trump In 50 Us States

அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்கும் ஜனாதிபதி அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கும் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் இந்த பேரணிகளில் இடம்பெற்றுள்ளன.

அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்கும் ஜனாதிபதி அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கும் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் இந்த பேரணிகளில் இடம்பெற்றுள்ளன.

 

 

இந்நிலையில், ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கியதிலிருந்து நாங்கள் கண்ட மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ட்ரம்புக்கு எதிராக வெடித்த சர்வதேச ரீதியிலான போராட்டம் .. அமெரிக்கர்கள் மத்தியில் அதிகரிக்கும் விரக்தி | Hands Off Protest Against Trump In 50 Us States

மேலும் இது அமெரிக்கர்களிடையே அதிகரித்து வரும் விரக்தியைக் குறிப்பதுடன், பல்வேறு வயதினரை உள்ளடக்கிய போராட்டக்காரர்களின் மாறுபட்ட அமைப்பையும் வெளிப்படுத்துவதாக அவை சுட்டிக்காட்டுகின்றன.

 

 

அதேவேளை, இது உடனடி மாற்றத்திற்கு வழிவகுக்கப் போவதில்லை என்று போராட்ட அமைப்பாளர்கள் கூறி வருகின்றனர், ஆனால் டொனால்ட் டிரம்ப் எதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார் என்பதை பல அமெரிக்கர்கள் எதிர்க்கிறார்கள் என்பதைக் காட்ட இது ஒரு முக்கியமான தருணம் எனவும் கூறப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top