News

அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பால் பெரும் சிக்கலில் அநுர அரசு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விதித்துள்ள வரி விதிப்பானது இலங்கைக்கு பெரும் தடையாக அமைந்துள்ளது.

ஆசிய நாடுகளிலேயே இலங்கைக்கு 44 வீத அதி உச்ச வரியை டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார்.

இதனால் உலகப் பொருளாதார நெருக்கடிக்கு ஊடாக மக்களின் கையிருப்பு குறைவடையும் பொழுது உல்லாசப் பயணங்கள் குறைவடையும்.

இலங்கையின் அந்நியச் செலவாணியை மீட்டுக் கொடுப்பது சுற்றுலாத்துறையும், ஆடைத்தொழிற்சாலையும் ஆகும்.

இந்த துறைகளில் அமெரிக்காவின் வரி விதிப்பு தாக்கம் செலுத்தும் பொழுது கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலம் மக்கள் மத்தியில் நினைவுக்கு வரும்.

அத்தோடு, இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பின்னர் சர்வதேச நாணயநிதியத்திடம் பெற்ற கடன்களை இலங்கை திருப்பிக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பொழுது கூடிய நெருக்கடியை நாடு சந்திக்க நேரிடும்.

இந்த நிலையில், அமெரிக்காவின் வரிவிதிப்பால் இலங்கைக்கு எந்த மீட்சியும் இல்லை என அரசியல் ஆய்வாளர் கிருஷ்ணர் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top