News

இராணுவச் சட்டத்தை அமுலுக்கு கொண்டுவரும் ஜனாதிபதி ட்ரம்ப்

 

ஜனவரி 20 ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றபோது கையெழுத்திட்ட முதல் நிர்வாக உத்தரவுகளில் ஒன்று, அமெரிக்காவின் தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவிப்பதாகும்.

குறித்த நிர்வாக உத்தரவு கையெழுத்தான தொண்ணூறு நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 20 அன்று, ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்க மண்ணில் இராணுவத்தை களமிறக்கும் பொருட்டு 1807 கிளர்ச்சிச் சட்டத்தை செயல்படுத்தலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஜனவரி 20 அன்று கெயெழுத்தான ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாக உத்தரவில், இந்த பிரகடனம் வெளியிடப்பட்ட 90 நாட்களுக்குள், பாதுகாப்பு செயலாளரும் உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளரும் அமெரிக்காவின் தெற்கு எல்லையில் உள்ள நிலைமைகள் குறித்து ஜனாதிபதியிடம் கூட்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, 1807 ஆம் ஆண்டின் கிளர்ச்சிச் சட்டத்தை செயல்படுத்தலாமா வேண்டாமா என்பது உட்பட, தெற்கு எல்லையின் முழுமையான செயல்பாட்டுக் கட்டுப்பாட்டைப் பெறுவதற்குத் தேவையான கூடுதல் நடவடிக்கைகள் தொடர்பான ஏதேனும் பரிந்துரைகளும் கோரப்பட்டது.

1807 ஆம் ஆண்டு கிளர்ச்சிச் சட்டத்தின்படி, சில நிபந்தனைகள் மற்றும் சூழ்நிலைகளில் சட்டம் அமுல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி இராணுவத்தையும் அமெரிக்க தேசிய காவல்படையையும் நிலைநிறுத்த அனுமதிக்கலாம்.

குடிமக்கள் உட்பட எந்தவொரு கிளர்ச்சி, கிளர்ச்சியாளர்கள் அல்லது வன்முறை அல்லது எதிர்ப்பின் எந்தவொரு செயலையும் முழுமையாக அடக்குவதற்கு இது இராணுவத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

இராணுவச் சட்டம் என்பது நிர்வாகம் மற்றும் நாட்டின் விவகாரங்களை நடத்துவதற்கான முழுமையான கட்டுப்பாட்டை ஒரு இராணுவ ஜெனரலுக்கு வழங்குவதாகும். ஆனால் கிளர்ச்சிச் சட்டம் என்பது அரசு மற்றும் நிர்வாகத்தின் அதிகாரங்களை அமெரிக்க ஜனாதிபதியிடம் வைத்திருக்கிறது, அவர் சட்டம் மற்றும் ஒழுங்கை அமுல்படுத்த இராணுவ அதிகாரங்களைப் பயன்படுத்துவார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top