News

இஸ்ரேல் கட்டுப்பாட்டில் காசாவின் 50% பகுதிகள்..!

 

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதும், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார். அதன்படி பேச்சுவார்த்தை நடைபெற்று கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி, அதாவது அவர் பதவி ஏற்பதற்கு முந்தைய தினம் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 7 வார போர் நிறுத்தம் ஏற்பட்டது.

அப்போது மனிதாபிமான பொருட்கள் காசா முனைக்கு கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்தது. அத்துடன் ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவித்தது. அதற்குப் பதிலாக சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது.

7 வாரம் முடிவடைந்த பின்னர் போர் நிறுத்தம் நீட்டிப்பிற்கான பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது மீண்டும் தாக்குதலை நடத்த தொடங்கியது, நடத்தியது. ஹமாஸ் அமைப்பினருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் காசாவில் உள்ள பகுதிகளை அதிக அளவில பிடிக்க முடிவு செய்தது.

இஸ்ரேல் எல்லையில் உள்ள காசாவின் வடக்கு முனையில் அதிகமான இடங்களை பிடித்து, பாதுகாப்பு பகுதியாக ஏற்படுத்துவதுதான் இலக்கு என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் தற்போது 50 சதவீத பகுதிகளை பிடித்துள்ளதாக உரிமைக் குழுக்களும், இஸ்ரேல் ராணுவமும் தெரிவித்துள்ளன. இதில் பெரும்பாலான பகுதிகள் இஸ்ரேல் ராணுவ தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் வாழ்வதற்கும், விவசாயத்திற்கும், கட்டமைப்பிற்கும் பயன்படுத்த முடியாதவை எனக் கூறப்படுகிறது.

காசாவின் தெற்கு பகுதியில் இருந்தை வடக்குப் பகுதியை துண்டித்தால் அது இஸ்ரேல் நாட்டின் நீண்ட கால பாதுகாப்பிற்கு உதவும் என இஸ்ரேல் நினைபதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top