News

உக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல்; 21 பேர் பலி, 83 பேர் படுகாயம்

 

உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 143வது நாளாக நீடித்து வருகிறது.

உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 143வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இருநாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இருப்பினும், உக்ரைனில் கணிசமான நிலப்பரப்பை கைப்பற்றி ரஷ்யா தங்கள் வசம் வைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் சுமா நகர் மீது ரஷியா இன்று சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இன்று காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 83 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பாமர மக்களின் உயிர்களை பறித்து விட்டார் என்றும், அயோக்கியர்களால் மட்டுமே இதுபோன்று செயல்பட முடியும் என்றும் அவர் ஆவேசமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top