பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபி சென்ட்ரல் தொகுதியில் பொதுத் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகு, என்.டி.பி (NDP) தலைவர் ஜக்மீத் சிங் தனது தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
“தற்காலிக தலைவரை நியமிக்கும் வரையில், நான் கட்சி தலைவராக இருந்து விலகுகிறேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளாவிய ரீதியில் என்.டி.பி கட்சி பல இடங்களில் இடங்களை இழந்தாலும், கனடாவிற்காக போராட்டத்தை தொடரும் என ஜக்மீத் சிங் உறுதியளித்தார்.
புதிதாக வரையறுக்கப்பட்ட பர்னபி சென்ட்ரல் தொகுதியில் வெற்றி பெற்ற புதிய எம்பியையும், லிபரல் தலைவர் மார்க் கார்னியையும் அவர் வாழ்த்தினார்.
2022 தொகுதி மறுசீரமைப்பின் போது சிங்கின் முந்தைய பர்னபி சவுத் தொகுதி நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை, என்.டி.பி எட்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது அல்லது முன்னிலையில் உள்ளது — இது கட்சி தனது அதிகாரப்பூர்வ கட்சி நிலையைத் தக்கவைக்க தேவையான எண்ணிக்கையைவிட குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகளால் தாம் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறிய சிங், கட்சியின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
“நாம் இன்னும் அதிகமான இடங்களை வெல்ல முடியாததற்காக நான் ஏமாற்றமடைந்துள்ளேன், ஆனால் நமது இயக்கத்தின்மீது எனக்கு ஏமாற்றமில்லை,” என சிங் தெரிவித்துள்ளார்.
“நாம் எப்போதும் பயத்தைக் காட்டிலும் நம்பிக்கையை, நெருக்கடியைக் காட்டிலும் நன்னம்பிக்கையை, வெறுப்பைக் காட்டிலும் ஒற்றுமையைத் தேர்ந்தெடுப்போம் என தெரிவித்துள்ளார்.