News

ஏலத்திற்கு வரும் உலகின் மிக அரிதான நீலவைரம்

உலகின் மிக அரிதான நீல வைரங்களில் ஒன்றான கோல்கொண்டா நீலம் (Golconda Blue Diamond) ஏலத்தில் விடப்பட உள்ளது.

இந்த ஏல விற்பனையானது மே 14 அன்று ஜெனீவாவில் (Geneva) நடைபெற உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தூர் மற்றும் பரோடா மகாராஜாக்களால் பொக்கிஷமாக வைக்கப்பட்டிருந்த, இந்த வைரக்கல் நவீனகால தெலங்கானாவில் உள்ள புகழ் பெற்ற கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இது குறித்து கிறிஸ்டியின் சர்வதேச நகைத் தலைவர் ராகுல் கடாகியா, “உன்னத ரத்தினங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே சந்தைக்கு வருகின்றன.

அதன் 259 ஆண்டுகால வரலாற்றில், கிறிஸ்டிஸ் உலகின் மிக முக்கியமான கோல்கொண்டா வைரங்களில் சிலவற்றை வழங்கும் பெருமையைப் பெற்றுள்ளது.

அவற்றில் ஆர்ச்டியூக் ஜோசப், பிரின்சி மற்றும் விட்டல்ஸ்பாக் ஆகியவை அடங்கும். அதன் அரச பாரம்பரியம், அசாதாரண நிறம் மற்றும் விதிவிலக்கான அளவு ஆகியவற்றால், ‘கோல்கொண்டா நீலம்’ உண்மையிலேயே உலகின் அரிதான நீல வைரங்களில் ஒன்றாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அற்புதமான வைரக்கல் 35-50 மில்லியன் டொலர் விலைக்கு விற்கப்படலாம் எனக் கூறப்படுகிறது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top