Canada

கனடா தேர்தலில் லிபரல் கட்சி வெற்றிபெற்று நான்காவது தடவை ஆட்சி அமைக்கின்றது

கனடாவில் (Canada) புதிய பிரதமரைத் தெரிவு செய்வதற்கான  தேர்தலில் மைக்கார்னியின் லிபரல் கட்சி வெற்றிபெற்றுள்ளது

லிபரல் கட்சி 144 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது 21 இடங்களில் முன்னனியில் உள்ளது

கென்சவேர்ட்டிவ் கட்சி 121 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது 26 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.

லிபரல் கட்சிக்கு 43 வீத வாக்குகளும் கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு 41 .7 வீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக சிபிசி தெரிவித்துள்ளது.

தேர்தலில் வெற்றிபெற்றதும்  உரையாற்றிய புதிய பிரதமர் மார்க் கார்னி, “கனடாவை வீட்டாகக் கருதும் ஒவ்வொருவரையும்” தமது அரசு பிரதிநிதித்துவம் செய்யும் என உறுதியளித்தார்.

“எதிர்பார்த்ததற்கு மாறாக பல மில்லியன் குடிமக்கள் வேறு முடிவை விரும்பினர்,” என வெற்றிப் பேரணியில் உற்சாகமான ரசிகர்களை நோக்கி கார்னி கூறினார்.

“கடந்த காலத்தின் பிரிவையும் கோபத்தையும் முடிவுக்கு கொண்டு வருவோம். நாம் அனைவரும் கனடியர்கள்தான்,” என்று அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் பதவிக்குத் தேர்வான கார்னி, கடுமையாகவும் நியாயமாகவும் நடைபெற்ற போட்டிக்காக கன்சர்வடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ர் உள்ளிட்ட மற்ற கட்சி தலைவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.

“அமெரிக்கா எங்கள் நிலத்தையும், வளங்களையும், நீரையும், நமது நாட்டையும் விரும்புகிறது,” என்று கார்னி எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா எங்களை ஆள விரும்புகிறது. ஆனால், அது ஒருபோதும், ஒருபோதும் நடக்காது என கார்னி தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top