புதிய இணைப்பு
கனேடிய பொதுத்தேர்தலின் தற்போதைய நிலவரப்படி, 52.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் 372,092 வாக்குகளை பெற்று லிபரல் கட்சி முன்னிலையில் உள்ளது.
அதேவேளை, கன்சர்வேடிவ் கட்சி 40.4 சதவீத வாக்கு வித்தியாசத்தில் 298,639 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
கனடாவில் 2025ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் இடம்பெற்ற நிலையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கைகளின் படி, லிபரல் கட்சி முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு கடந்த மாதம் கனடாவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது, லிபரல் கட்சிக்கு 152 ஆசனங்களும், கன்சர்வேடிவ் கட்சிக்கு 120 ஆசனங்களும் இருந்தன.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்புக்கள் மற்றும் மிரட்டல்களுக்கு மத்தியில் ஏழு மில்லியனுக்கும் அதிகமான கனேடியர்கள் ஏற்கனவே முன்கூட்டியே வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில், ஆரம்பிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கைகளின் அடிப்படையில் முதற்கட்ட முடிவுகள் திங்கள்கிழமை இரவு அல்லது செவ்வாய்க்கிழமை அதிகாலையிலோ உள்ளூர் நேரப்படி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, 212,015 வாக்குகளை பெற்று லிபரல் கட்சி முதல் இடத்திலும் 172,115 வாக்குகளை பெற்று கன்சர்வேடிவ் கட்சி இரண்டாவது இடத்திலும் இருந்த வருகின்றன.