கனடாவில் பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. ஆளும் லிபரல் கட்சியினர் முன்னிலை வகிக்கின்றனர்.
கனடாவில் 2025ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் இடம்பெற்ற நிலையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கைகளின் படி, லிபரல் கட்சி முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் துவக்கம் முதலே லிபரல் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. முடிவுகள் தெரியவரத்தொடங்கிய 196 தொகுதிகளில் லிபரல் கட்சி 163 இடங்களிலும் கன்சர்வேட்டிவ் கட்சி 147 இடங்களிலும், கியூபக் கூட்டணி 23 இடங்களும், என்.டி.பி., கட்சி 8 இடங்களும், பசுமைக் கட்சி 1 இடங்களும் முன்னிலை பெற்றுள்ளன.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 172 இடங்களில் வெற்றிபெற வேண்டும். பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும். அந்த கட்சியின் உறுப்பினர்கள் சேர்ந்து பிரதமரை தேர்ந்தெடுக்க உள்ளனர். லிபரல் கட்சி சார்பில் மார்க் கர்னேவும், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பியர் போயில்வேர் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.