பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்களுக்கு பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த போாில் பாலஸ்தீனத்தை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். 2 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்றுவரும் போரில், காசாவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரமாக அதிகரித்துள்ளது.