News

காணாமல்போனவர்களின் உறவுகளுக்கான நீதி: அரசாங்கம் விடுத்த அறிவிப்பு

காணாமல்போனவர்கள் தொடர்பான அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இன்று (ஏப்ரல் 09) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ஹரிணி, “காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

இருப்பினும், இந்த விசாரணைகளை நாங்கள் தனிப்பட்ட அடிப்படையில் நடத்த முடியாது, இதுபோன்ற விடயங்கள் சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் தீர்க்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் நிர்வாக மற்றும் அமைப்பு ரீதியான தோல்விகள்தான் இந்த விஷயங்களில் தாமதத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தன.எனவே, இதுபோன்ற பிரச்சினைகள் கவனிக்கப்பட வேண்டும், ”என்றார்.

மேலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்த பரிந்துரைகளை வழங்க நீதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top