News

டிரம்புக்கு எதிராக வெடித்தது போராட்டம் – வீதியில் இறங்கிய அமெரிக்க மக்கள்

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு (Donald Trump) எதிராக அமெரிக்காவில் போராட்டங்கள் வலுப்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகள் ஜனநாயக கொள்கைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் என தெரிவித்து அமெரிக்கா மக்கள் தெருக்களில் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

அந்தவகையில், அமெரிக்காவில் நேற்று சனிக்கிழமை (19.4.2025) முதல் இந்தப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

 

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது முதல் இறக்குமதி ஏற்றுமதி வரி ஏற்றம், வெளிநாட்டவர்களை வெளியேற்றுதல், வரி உயர்வு, பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதி நிறுத்தம், காஸா, உக்ரைன்போரில் அமெரிக்க நிலை, அரச ஊழியர்கள் பணி நீக்கம் என கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இது போன்ற முடிவுகளுக்கு அமெரிக்க மக்கள் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், 50 மாகாணங்களிலும் 400 க்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்த போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க போராட்டத்தை தொடங்கி உள்ளதாகவும், மீண்டும் ஒரு சுதந்திர புரட்சியை உருவாக்குவோம் என்றும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top