இப்பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக சுரங்கப்பாதை கட்டப்பட்டு வந்தது.
தென்கொரியாவின் தலைநகர் சியோலில் வங்மயோங் என்ற நகரம் உள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக சுரங்கப்பாதை கட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில், சுரங்கப்பாதை இன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் சுரங்கப்பாதை பணியை மேற்கொண்ட 2 ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுரங்கப்பாதை அமைக்கும்போது அருகே உள்ள கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதால் பெரும்பாலான ஊழியர்கள் பணியை நிறுத்திவிட்டு புறப்பட்டுள்ளனர். அப்போது திடீரென சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. இதில், 2 பேரும் சிக்கிக்கொண்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.