மியான்மரில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 ஆயிரத்து 645 பேர் உயிரிழந்தனர்.
மியாமர் நாட்டில் கடந்த மாதம் 28ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 3 ஆயிரத்து 645 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 ஆயிரத்து 17 பேர் படுகாயமடைந்தனர். நிலநடுக்கத்தில் சிக்கி மாயமான 148 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மியான்மரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது . அந்நாட்டின் மைக்டிலா நகரை மையமாக கொண்டு இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. ஆனால், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு உள்பட பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.