News

மீண்டும் சிறைக்கு சென்ற வியாழேந்திரன்!

இலஞ்ச வழக்கில் கைதாகி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (08) பிற்பகல், சந்தேக நபரான முன்னாள் இராஜாங்க அமைச்சரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், பிணை நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்யத் தவறியதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மார்ச் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இலஞ்சம் பெற்றுக் கொள்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top