News

ரஷ்யாவில் குண்டு வெடிப்பு; ராணுவ தளபதி பலி

 

 

ரஷ்யாவில் காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில், ராணுவ துணை தளபதி யாரோஸ்லாவ் மோஸ்காலிக் பலியானார்.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள பாலஷிகா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார், நேற்று திடீரென வெடித்து சிதறியது.

பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பால் அப்பகுதியே புகைமண்டலமாக மாறியது. அருகில் இருந்த கட்டடங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறின. ஒரு சில கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. இந்த விபத்தில், காரில் இருந்த நபர் பலியானார்.

விசாரணையில், குண்டு வெடிப்பில் பலியானது, ரஷ்யா ஆயுதப் படையின் செயல்பாட்டுத் துறையின் துணைத் தளபதியான யாரோஸ்லாவ் மோஸ்காலிக் என தெரியவந்துள்ளது. அவரின் காரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டு மர்ம நபர்களால் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top