News

லண்டன் விமான நிலையத்தில் திடீர் வெடிப்புச் சம்பவம்.. பீதியில் நூற்றுக்கணக்கான பயணிகள்

பிரித்தானியா – லண்டன் காட்விக் விமான (Gatwick Airport) நிலையத்தில் திடீரென கார் ஒன்று வெடித்து சிதறியதில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்நிலையில், இந்த தீ விபத்தின் அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

சம்பவத்தில், காரின் டயர்கள் வெடித்ததால் ஏற்பட்ட பாரிய சத்தம், பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அசாதாரண சூழ்நிலையில், தீயை அணைக்க அங்குள்ளவர்கள் முயற்சித்துள்ளதுடன் தீயின் தீவிரம் அதிகமாக இருந்ததால் தொழில்முறை தீயணைப்பு வீரர்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

 

 

அதேவேளை, இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதுடன் தீ விபத்தினால் விமான நிலையத்தின் செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் விமான நிலையத்தில் திடீர் வெடிப்புச் சம்பவம்.. பீதியில் நூற்றுக்கணக்கான பயணிகள் | Uk London Gatwick Airport Car Bursts

அத்துடன், இதில் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் என யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top