News

10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்திய சீனா

 

தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அந்நாடு உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது.

உலகின் முதல் 10ஜி இணைய சேவையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நாட்டின் ஹுபே மாகாணம் சுனன் நகரில் 10ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

10ஜி மூலம் மின்னல் வேக இணையதள வசதி பெற முடியும். 10ஜி இணையதள சேவை மூலம் 3 மில்லிநொடிகளில் 9,834 எம்.பி.பி.எஸ் வேகத்தில் டவுன்லோடு செய்யவும், 1,008 எம்.பி.பி.எஸ். வேகத்தில் அப்லோடு செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஜி சேவை நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூவாய் நிறுவனம் மற்றும் சீன யுனிகான் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 10ஜி இணையசேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top