உக்ரைனுடன் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா தொடர்ந்துள்ள போர், மூன்றாவது ஆண்டாக நடக்கிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சிகள் மேற்கொண்டார்.
இது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் பேச்சு நடத்தினார். ஆனால், போர் நிறுத்தம் செய்ய ரஷ்யா ஒப்புக் கொள்ளவில்லை.
இந்நிலையில், உக்ரைனுடன் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து செய்தி சேனலுக்கு புடின் அளித்த பேட்டி: எந்தவொரு அமைதி முயற்சிகளுக்கும் நாங்கள் காத்திருக்கிறோம். ஒரு நாள் ஈஸ்டர் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, மேலும் போர் நிறுத்தங்களைத் தொடர விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.