திறப்பு இல்லாத உள்நுழைவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் குற்றவாளிகளை இலக்காகக் கொண்டு அதிகரித்து வரும் வாகனத் திருட்டுகளுக்கு எதிரான போராட்டத்தை ஒன்ராறியோ ஒரு புதிய சட்டமன்றத் திட்டத்துடன் முடுக்கிவிடுகிறது.
“திறப்பு இல்லாத உள்நுழைவுத் தொழில்நுட்பத்தின் சட்டவிரோத பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம், குற்றச் செயல்களை நாங்கள் தடுத்து, திருட்டுகள் நடப்பதற்கு முன்பே அவற்றைத் தடுக்க காவல்துறைக்கு தேவையான கருவிகளை வழங்குகிறோம்” என்று அமைச்சர் விஜய் தனிகாசலம் கூறினார்.
முன்மொழியப்பட்ட சட்டம், வாகனத் திருட்டில் பயன்படுத்தப்படும் என்று சந்தேகிக்கப்படும் ‘கீ ஃபோப்’ நிரலாக்க சாதனங்கள் மற்றும் ‘ஸ்கேனர்கள்’ போன்ற பொருட்களைக் கைப்பற்ற காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கும். சட்ட அமலாக்கத்தை ஆதரிப்பதற்கும் அதிகளவில் திருட்டு நடைபெறும் இடங்களில் கவனம் செலுத்துவதற்கும் ஒரு புதிய பெரிய வாகனத் திருட்டு வழக்கு விசாரணை குழு நிரந்தரமாக்கப்படும். இம்முயற்சி ஒன்ராறியோ எங்கும் வாழும் மக்கள் தங்கள் சமூகங்கள் தீவிரமாகப் பாதுகாக்கப்படுவதை அறிந்து பாதுகாப்பாக உணர்வதை உறுதி செய்கிறது.