இந்த வைரஸ் மக்கள் மத்தியில் கடும் தாக்கங்களை ஏற்படுத்துவது மிகக் குறைவாகும். இது ஆபத்து குறைந்த வைரஸ் என்றுள்ள இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம், இவ்வைரஸ் இங்கிலாந்தில் காணப்படும் நுளம்புகளின் ஊடாகப் பரவுவதற்கான சாத்தியங்கள் காணப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
பறவைகளைக் குத்தும் நுளம்புகளின் ஊடாகப் பரவும் இவ்வைரஸ், ஐரோப்பா உட்பட உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் பிற காரணிகள் அண்மைக் காலமாக நுளம்புகளையும் அவை காவிச் செல்லும் நோய்களையும் வடக்கு நோக்கி கொண்டு செல்லப்படுவதாகத் தெரிகிறது. ஆபிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள் உட்பட உலகின் பல பகுதிகளிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது. 2000 முதல் வெஸ்ட் நைல் வைரஸுக்கு உலகில் ஏழு பேர் உள்ளாகியுள்ளனர். ஆனால் பிரிட்டனில் எவருக்கும் இவ்வைரஸ் தாக்கம் இற்றை வரையும் ஏற்படவில்லை.
இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனமும் விலங்கு மற்றும் தாவர சுகாதார நிறுவனமும் இணைந்து 2023 ஆம் ஆண்டு நாட்டிங்ஹாம்ஷையரில் உள்ள ரெட்ஃபோர்ட்டுக்கு அருகிலுள்ள குளங்களில் சேகரித்த நுளம்புகளில் இவ்வைரஸின் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன