கனடாவில் (canada)அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சீக்கியர்கள் 22 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
லிபரல் மற்றும் கொன்சர்வேட்டிவ் கட்சிகள் சார்பில் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
பிராம்ப்டன் வடக்கு தொகுதியில் லிபரல் கட்சியை சேர்ந்த ரூபி சகோட்டா, பிராம்ப்டன் கிழக்கு தொகுதியில் சுக்தீப் கங் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களை தவிர்த்து அமைச்சராக இருந்த அனிதா ஆனந்த், அஞ்சு தில்லான், சுக் தலிவால், ரன்தீப் சராய், பாரம் பெயின்ஸ் ஆகியோர் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிக்கனியை பறித்தனர்.
கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜஸ்ராஜ் ஹலான், தல்விந்தர் ஹில், அமன்ப்ரீத் கில், அர்பன் கன்னா, டிம் உப்பால், பரம் கில், சுக்மன் கில், ஜக்சரண் சிங் மற்றும் ஹர்ப் கில் உள்ளிட்ட சீக்கியர்களும் வெற்றி பெற்று உள்ளனர்.
இந்த தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.