2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் தமிழர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கனடாவின் தமிழர் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளிலும் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்கள் இன்று நினைவுகூரப்பட்டனர்.
இதற்கமைய, கனடா – ப்ரம்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அமைந்துள்ள பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன்போது, புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டு உயிரிழந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நினைவுச்சின்னமானது, பிரம்டன் நகரின் மேயர் பெட்ரிக் ப்ரவுனால் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.