News

குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்கும் பிரித்தானியா

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது

வேலைவாய்ப்பு விசாக்கள் மூலம் பிரித்தானியாவுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய கொள்கைகளை உள்ளடக்கிய “இமிக்ரேஷன் வைட் பேப்பர்” எனப்படும் ஆவணம் இன்று (12) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு விசா வழங்கும்போது, அவர்களின் உயர் கல்வித் தகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், பயிற்சியற்ற தொழிலாளர்களை அந்நாட்டுக்கு அழைத்து வருவதை கட்டுப்படுத்தவும் பிரித்தானிய அரசு தீர்மானித்துள்ளது.

அதேபோல், பயிற்சியற்ற தொழிலாளர்களை பணியமர்த்தும்போது, ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்கு உட்பட்டு அவர்களை பணியமர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு தொழிலாளர்களை பயன்படுத்தும் தொழில்துறைகளை அடையாளம் கண்டு, அந்தத் தொழில்களுக்கு மட்டுமே அவர்களை பணியமர்த்தும் திட்டமொன்றையும் அறிமுகப்படுத்தவுள்ளனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top