எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிடிவாதம் காரணமாக கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றும் எதிர்க்கட்சிகளின் முயற்சி தோல்வியுறும் கட்டத்தை அடைந்துள்ளது.
கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களைப் பெற்று கூடுதல் ஆசனங்களைப் பெற்ற கட்சியாக தெரிவாகியுள்ளது.
எனினும் எதிர்க்கட்சிகள் தரப்பில் 69 ஆசனங்கள் வெல்லப்பட்டிருப்பதால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்றலாம் எனும் நிலை உள்ளது.
இதன் காரணமாக தேசிய மக்கள் சக்திக்கு அடுத்ததாக கூடுதல் உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, கொழும்பு மாநகர சபை அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பினால் ஆதரவு தரத் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்திருந்தது.
எனினும் ரணில் விக்கிரமசிங்க மீதுள்ள தனிப்பட்ட பகைமையுணர்வு காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவைப் பெற ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச விருப்பமில்லை என்று தெரிய வந்துள்ளது.
அதன் காரணமாக கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தியே கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.