News

தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்க தயார் : கஜேந்திரகுமார் 

புரிந்துணர்வு அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (10.05.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், “நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய பாதையிலிருந்து தமிழ் மக்கள் படிப்படியாக விலகி வருகின்றார்கள் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டு வந்தது.

இவ்வாறான ஒரு காலச் சூழலில் பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்நிறுத்திய ஒரு தேர்தலில் மக்கள் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர்.

இதனூடாக வடக்கு கிழக்கில் தென் இலங்கை இனவாதிகளுக்கு இடம் கொடுக்கப்படாது என்பதை ஆட்சியாளர்களுக்கு தமிழ் மக்களால் உணர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ் தேசிய பரப்பில் அனேக பிரதேசங்களில் தமிழ் தேசியம் வெற்றிபெற்றுள்ள போதும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையில் பின்தங்கிய போக்கே இருக்கின்றது.

அதேபோன்று தமிழ் தேசிய பேரவைக்கும் இலங்கை தமிழ் காங்கிரசுக்கும் மக்கள் கொடுத்துள்ள அல்லது கிடைத்த வெற்றியாகவும் இதை நாம் பார்க்கின்றோம்.

தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவது காலச் சூழலுக்கு தேவையான ஒன்றாகும்.

இதனால் தமிழ் தரப்பு ஆட்சி அமைக்க நாம் தமிழ் அரசு கட்சிக்கும் கொள்கை நிலைப்பாட்டுடன் நின்று ஆரரவை கொடுக்க பின்னிற்கமாட்டோம்.”என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top