தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி, நீதிக்கும் உண்மைக்கும் தமிழர்கள் மேற்கொள்ளும் தொடர்ச்சியான பயணத்தின் உறுதியான அடையாளமாக அமைந்துள்ளது என கனடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கனடிய தமிழர் பேரவை இதனைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது.“பிரம்ப்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு (10.05.2025) இடம்பெற்றிருந்தது.
இலங்கையின் யுத்தத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்த நிலைவாலயத்தை கனடிய தமிழர் பேரவை ஆதரிக்கின்றது.
உலகம் முழுவதும் தமிழர்களுக்கான நினைவேந்தலின் மாதமாக அமைந்துள்ள மே மாதத்தை முன்னிட்டு இந்த நினைவுச்சின்னம் நீதிக்கும், உண்மைக்கும், தமிழர்கள் மேற்கொள்ளும் தொடர்ச்சியான பயணத்தின் உறுதியான அடையாளமாக அமைந்துள்ளது.
இந்த வரலாற்றுச் சம்பவத்தை சாத்தியமாக்கிய பிரம்ப்டன் நகரசபைக்கும், மேயர் பாட்ரிக் ப்ரவுன் அவர்களுக்கும், அனைத்து ஏற்பாட்டாளர்கள் மற்றும் நன்கொடைதாரர்களுக்கும் கனடிய தமிழர் பேரவை மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.” என தெரிவித்துள்ளது.