News

தெற்கு கரோலினாவில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் காயம்

 

தெற்கு கரோலினாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் தெற்கு கரோலினாவின் கடற்கரை நகரமான லிட்டில் ரிவரில், இரவு துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மிர்ட்டல் கடற்கரையிலிருந்து வட கிழக்கே 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிட்டில் ரிவரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

வன்முறை எதனால் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார்? என்ற விவரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top