News

நூலிழையில் உயிர் தப்பிய புடின்! குறிவைக்கப்பட்ட உலங்கு வானுர்தி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சென்ற உலங்கு வானுர்தியை குறிவைத்து உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், புடின் தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவுக்குப் பிறகு புடின், பதற்றமான எல்லைப் பகுதியான குர்ஸ்க்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

ரஷ்யா, உக்ரேனியப் படைகளை ஏப்ரல் மாதம் குர்ஸ்க் பகுதியிலிருந்து விரட்டியடித்ததாக அறிவித்த பிறகு, புடின் குறித்த பகுதிக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

புடினின் உலங்கு வானுர்தி பாதையில் உக்ரைனால் ஏவப்பட்ட ஒரு ஆளில்லா விமானம், ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புடினின் உலங்கு வானுர்தி தொடரணி வானில் பறந்து கொண்டிருக்கும்போதே அதைத் தாக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top