கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தெற்கு சூடான். இந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது.
அந்நாட்டின் பேன்ஹக் நகரில் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர்.
தெற்கு சூடான் மக்கள் பாதுகாப்புப்படை என்ற கிளர்ச்சி அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.