News

மிரட்டும் வடகொரியா : பாரிய போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை

பாரிய போர்க்கப்பலை உருவாக்கி அதிலிருந்து முதல் முறையாக ஏவுகணை சோதனையை வடகொரியா (north korea)நடத்தியுள்ளது செயற்கை கோள் படங்கள் வாயிலாக தெரியவந்துளளது.

வட கொரியாவின் கடற்படை பலத்தை வலுப்படுத்த நாட்டின் மேற்கு கடற்கரையில் ஒரு கப்பல் கட்டும் தளத்தில் ஒரு பெரிய கப்பல் உருவாகி வருவது செயற்கை கோள் புகைப்படங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.

தலைநகர் பியோங்யாங்கின் தென்மேற்கே 60 கி.மீ/ தொலைவில் நம்போ கப்பல் கட்டும் தளத்தில் அந்த பெரிய போர்க்கப்பல் தண்ணீரில் மிதப்பது தெளிவாகத் தெரிகிறது.

இன்று(30) இக்கப்பலிலிருந்து ஏவுகணைகளை வீசி வெற்றிகரமாக சோதனை நடத்தியது.அந்த சோதனை நடவடிக்டகையை ஜனாதிபதி கிம்ஜோங் உன்(kim jong u) பார்வையிட்டார்.

இந்த போர்க்கப்பல் தற்போதைய கடற்படையில் உள்ள எந்தவொரு கப்பலின் அளவையும் விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கலாம் என்றும், கருதப்படுகிறது. இந்த போர்க்கப்பலின் நீளம் சுமார் 140 மீட்டர் (459 அடி) இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top