நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை, மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சியில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரனின் அணியினர் இறங்குவார்கள் என அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
சிறீதரன் அதற்கு மறுத்தாலும் அவரை கட்சியின் விருப்பத்துக்கு மாறாக நடக்கின்றார் எனக் கூறி அவரை வெளியேற்ற முடியும்.
இதில் இரண்டு நலன்கள் உள்ளன. ஒன்று, சிறீதரனை கட்சியை விட்டு வெளியேற்ற முடியும். மற்றொன்று, சிறீதரனின் நாடளுமன்ற ஆசனமும் வெற்றிடமாகும்.
இவ்வாறான சூழ்நிலையில், வெற்றிடமான நாடாளுமன்ற ஆசனத்திற்கு சுமந்திரன் தெரிவு செய்யப்படுவார் என திபாகரன் கூறியுள்ளார்.