டெஹ்ரான்: ஈரான் அணுசக்தி திட்டங்களை குறி வைத்தே, அதன் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தின. தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், ‘எங்களுடைய அணுசக்தி திட்டங்கள் தொடரும்’ என, ஈரான் கூறியுள்ளது.
ஈரான் உடனான அணுசக்தி தொடர்பான அமெரிக்காவின் பேச்சு தோல்வியில் முடிந்தது. மறுபக்கம் ‘ஈரான் அணுசக்தியை அணு ஆயுதம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது; அது எங்களை குறிவைக்கும்’ என்று, இஸ்ரேல் கூறியது.
இதையடுத்தே, ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அதில் அமெரிக்காவும் இணைந்தது.
ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி மையங்களான போர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகியவை தாக்கப்பட்டதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் கூறுகின்றன.
ஆனால், இந்த தாக்குதல்களுக்கு முன்பாகவே, 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பாதுகாப்பான இடத்துக்கு ஈரான் மாற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.