News

ஈரான் வசமிருந்த 400 கிலோ யுரேனியம் எங்கே..! அமெரிக்கா  அதிர்ச்சி தகவல்

ஈரான் வசமிருந்த 10 அணு ஆயுதங்களை தயாரிக்க கூடிய 400 கிலோ யுரேனியத்திற்கு என்ன நடந்தது என தெரியவில்லை என அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் தெரிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஈரான் சேமித்து வைத்து இருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கே போனது என தெரியவில்லை. அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் சேதம் அடைந்து இருக்கும்.அல்லது அழிந்திருக்கும். ஆனால், அதனை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

ஈரான் வசமிருந்த 400 கிலோ யுரேனியம் எங்கே..! அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Fears Over Irans Missing 400Kg Of Uranium

போர்டோவ் அணுசக்தி நிலையத்தை அழிப்பதே தாக்குதலின் நோக்கம். மற்ற நிலையங்களுக்கும் சேதம் ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டோம். தாக்குதலில், போர்டோவ் அணுசக்தி நிலையத்திற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு இருக்கும் என நம்புகிறோம்.

இதேவேளை அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்னர், யுரேனியத்தை பாதுகாப்பான இடங்களுக்கு ஈரான் மாற்றியிருக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் போர்டோவ் அணுசக்தி நிலையங்கள் முன்பு 16 பாரவூர்திகள் வரிசையில் நின்றமை செயற்கைகோள் எடுத்த புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு பிறகு அந்த இடத்தில் அந்த பாரவூர்திகள் காணப்படவில்லை. அதில் என்ன கொண்டு செல்லப்பட்டது என தெரியவில்லை என அமெரிக்க நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top