News

எலான் மஸ்குக்கு டிரம்ப் மிரட்டல்

 

அமெரிக்காவில் கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்புக்கு, பிரபல தொழிலதிபரும், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளி தொழில்நுட்ப நிறுவனருமான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்தார்; நிதியுதவியும் செய்தார்.

கடந்த ஜனவரியில், அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும், அரசின் செலவை குறைக்கவும், திறனை மேம்படுத்தவும் சிறப்பு துறையை உருவாக்கினார். இதன் தலைவராக எலான் மஸ்க் இருந்தார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால், சமீபத்தில் அந்தப் பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலகினார். இந்நிலையில், டிரம்ப் அரசு சார்பில் புதிய செலவு மற்றும் வரி மசோதாவை செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கும் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், எலான் மஸ்குக்கு டிரம்ப் நேற்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தன் சமூக வலைதள பக்கத்தில், ‘நமது பட்ஜெட்டில், பில்லியன் கணக்கான டாலர்களில் பணத்தைச் சேமிப்பதற்கான எளிதான வழி, எலானின் நிறுவனத்துக்கான அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும்’ என, அவர் குறிப்பிட்டுஉள்ளார்.

முன்னதாக, எலான் மஸ்குடனான பிரிவு ஏமாற்றம் அளிப்பதாக நேற்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top