News

ஜேர்மனியைக் குறிவைக்கும் புடின்: உக்ரைன் வழியே வெடிக்கும் மோதல்

 

ஜேர்மனி Taurus வகை நீண்ட தூரக் க்ரூஸ் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கினால், ஜேர்மனி ஒரு போர் பங்கேற்பாளராகவே பார்க்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஜேர்மனிக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜேர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், தற்போது Taurus ஏவுகணைகள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்திருந்தாலும், உக்ரைன் தொடர்ந்து இந்த ஆயுதத்தை கோரி வருகின்றது.

இந்தநிலையில், ஜேர்மன் நிபுணர்கள் சாட்லைட் மூலம் இலக்கை தேர்ந்தெடுக்க உதவ வேண்டியிருக்கும் எனவம், இது நேரடியாக ரஷ்யாவை தாக்கும் செயலாகவே அமையும் எனவும் புடின் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸுடன் உரையாட தயாராக இருப்பதாகவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஜேர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் நடுநிலை நாடுகள் அல்ல, உக்ரைனுக்கு ஆதரவளிக்கின்ற பக்கவாதிகள் என ரஷ்யா கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Taurus ஏவுகணையின் தந்திரக் திறனும், இதன் அரசியல் தாக்கங்களும் உலகளவில் நிலவும் பதற்றங்களை மேலும் தீவிரமாக்கும் அபாயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகி்னறமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top