News

அமெரிக்காவின் அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

 

அலாஸ்காவில் 7.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

அலாஸ்காவில் உள்ள போபோப் தீவில் உள்ள சாண்ட் பாயிண்ட் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு கடலோர அஸ்காவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. மிக்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், நிலநடுக்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.

இந்த அளவிலான 10 முதல் 15 நிலநடுக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் பதிவாகி உள்ளன. அலாஸ்காவில் குடியிருப்பாளர் ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு உள்ளது. அதில் கட்டடங்கள் குலுங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது. இருப்பினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு அது ரத்து செய்யப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top