News

அமெரிக்கா டெக்ஸாசில் மழை வெள்ளம்; பலி எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

 

அமெரிக்கா டெக்ஸாசில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், இதுவரை 104 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கெர்கவுண்டியில் பெய்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இன்னமும் பலரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

டெக்சாஸ் கனமழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு: பேரிடராக அறிவித்த டிரம்ப்

கனமழை காரணமாக, இதுவரை 104 பேர் உயிரிழந்துள்ளனர். கெர் கவுன்டியின் சராசரி ஆண்டு மழைப்பொழிவில் மூன்றில் ஒரு பங்கு மழை அதாவது, 30 செ.மீ., மழை ஒரே இரவில் பெய்துள்ளதே நிலைமை மோசமாக காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழப்பு எதிரொலியாக இதை பேரிடராக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பான கோப்பில் அவர் கையெழுத்திட்டுள்ளார். குவாடலுாப் நதியில் 45 நிமிடங்களில் 26 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்து, கரையில் இருந்த குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் நிலைமை மோசமானது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top