கிழக்கு இநதோனேசியாவிலுள்ள லெவோதோபி லாகி லாகி எரிமலை திங்களன்று உக்கிரமாக குமுறி 18 கிலோ மீற்றர் உயரத்துக்கு சாம்பலையும் புகையையும் வெளித்தள்ளியுள்ளது.
இதனையடுத்த இந்தோனேசிய பாலித் தீவுக்கான மற்றும் அந்தத் தீவிலிருந்தான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலா தீவான புளோரஸிலேயே எரிமலையே குமுறியுள்ளது.
பாலி சர்வதேச விமான நிலையத்துக்கான 24 விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பிராந்தியத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வந்த புளோரஸ், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், தென்கொரியாவுக்கான விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டும் தாமதப்படுத்தப்பட்டும் உள்ளன.
இருப்பினும் சில செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கின.
நவம்பர் மாதத்திற்குப் பின்னர் திங்கட்கிழமை காலை அந்நாட்டு நேரப்படி 11:05 மணிக்கு எழுந்த வெப்ப மேகங்கள் மிக உயர்ந்ததாக இருந்தது என புவியியல் நிறுவனத் தலைவர் முகமது வாஃபித் தெரிவித்துள்ளார்.
கார்கள் மற்றும் பஸ்களில் குடியிருப்பாளர்கள் ஏறி தப்பிச் செல்லும்போது எரிமலையின் சிகரங்களிலிருந்து சிவப்பு நிற எரிமலைக் குழம்பு வெளியேறுவதை இரவு முழுவதும் பகிரப்பட்ட காணொளிகள் காட்டுகின்றன.
இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் அந்தப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள குடியிருப்பாளர்களுக்கு தண்ணீர், உணவு மற்றும் முகக்கவசங்கள் நிலவுவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தோனேசியா பசிபிக் “நெருப்பு வளையத்தில்” அமைந்துள்ளது, அங்கு டெக்டோனிக் தகடுகள் மோதுகின்றன, இதனால் அடிக்கடி எரிமலை மற்றும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன.
லெவோடோபி லக்கி-லக்கி இந்த ஆண்டு பல முறை குமுறியுள்ளது. ஆனால் இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.
கடந்த நவம்பரில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.