News

ஈஸ்டர் தாக்குதலில் “பிள்ளையான்” கருவி மாத்திரமே- கோட்டாபய ஏன் விசாரிக்கப்படவில்லை! சிறீதரன்

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையான் ஒரு கருவி மட்டுமே! முக்கிய காரணமாக இருந்த கோட்டபய ராஜபக்ச ஏன் விசாரிக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஈஸ்டர் தாக்குதலை மையமாக வைத்து பிள்ளையான் விசாரிக்கப்படுகின்றார். அவர் செய்த குற்றங்களுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும், நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்ல.

ஈஸ்டர் தாக்குதல் நடந்த அதே மாதம் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச, இஸ்லாம் மதம் இந்த நாட்டை என்ன செய்ய போகின்றது.இதற்கு பின்னால் யார் இருந்தார்கள் என்று.. ஆங்கில பத்திரிக்கையொன்றுக்கு  கூறியிருந்தார்.

ஆனால் அவர் இன்றுவரை விசாரிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top