News

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்யா ஒரே நாளில் 728 ட்ரோன் பயன்பாடு

ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

நேற்று மாத்திரம் 728 ட்ரோன்களும் 13 ஏவுகணைகளும் பயன்படுத்தி தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விமானப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் உக்ரைன் விமானப்படை விடுத்துள்ள அறிக்கையில், ரஷ்யா, உக்ரைன் மீதான யுத்தத்தை ஆரம்பித்த பின்னர் அதிகூடிய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவே ஆகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கியேவுக்கு அதிக இராணுவ ஆதரவு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டதைத் தொடர்ந்து இவ்வாறு தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் மேற்கு மாவட்டமான க்மெல்னிட்ஸ்கியில் ஒரு குடிமகன் உயிரிழந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ‘அமைதி மற்றும் போர் நிறுத்தத்தை அடைய பல முயற்சிகள் இடம்பெறுகின்ற போதிலும் அவை எல்லாவற்றையும் ரஷ்யா நிராகரிக்கிறது. ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வகையில் எங்கள் கூட்டாளிகளுக்கு அழுத்தம் கொடுப்பது எப்படி என்று தெரியும். இதன் நிமித்தம் அமைதியை விரும்பும் அனைவரும் செயல்பட வேண்டும் என்றுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top