உலகளாவிய சுற்றுலா வழிகாட்டி இணையத் தளமான பிக் 7 டிராவல் தொகுத்த ‘உலகின் 50 சிறந்த தீவுகள்’ பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதன் மூலம் உலகின் மிக அழகான தீவு என்ற மகுடம் இலங்கைக்கு சூட்டப்பட்டுள்ளது.
பிக் 7 டிராவல் இன் படி, இலங்கை அதன் வளமான கலாச்சார பாரம்பரியம், மாறுபட்ட நிலப்பரப்புகள் மற்றும் அழகிய கடற்கரைகள் ஆகியவற்றின் கலவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இலங்கைத் தேசத்தின் தனித்துவமான வனவிலங்குகள், பழங்கால கோயில்கள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் துடிப்பான உள்ளூர் அனுபவங்களுக்காகவும் இந்தப் பட்டியலில் இலங்கை முன்னணி இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.