News

ஐஸ்லாந்தில் வெடித்துச் சிதறிய எரிமலை!

ஐஸ்லாந்து- ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவமானது நேற்று(16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீவிர நில அதிர்வுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்களும் சுற்றுலா பயணிகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஐஸ்லாந்தில் வெடித்துச் சிதறிய எரிமலை! | Volcano Erupts In Iceland Evacuation Of People

எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா குழம்பு சுமார் 700 முதல் 1000 மீட்டர் அகலமுள்ள பிளவு வழியாக தென்கிழக்கு நோக்கிப் பாய்ந்து வருகிறது.

சுமார் 800 ஆண்டுகளாக செயலற்று இருந்த இந்த எரிமலைப் பகுதி கடந்த 2023 நவம்பர் முதல் மீண்டும் செயற்படத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top