எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதல் ஒன்ராறியோவில் வாடகைக்கு குடியிருப்போருக்கு ஆதரவாக புதிய விதி நடைமுறைக்கு வரவுள்ளது.
வாடகையை உயர்த்துவதற்காக வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு குடியிருப்போரை புனரமைப்பு என்ற பெயரில் வெளியேற்றுவது வழக்கமான விடயமாக உள்ளது.
இவ்வாறு வாடகைக்கு குடியிருப்போரை வெளியேற்றுவதை நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம் தடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, புனரமைப்புக்காக குடியிருப்பாளர்களை வெளியேற்ற முன்னர் வீட்டு உரிமையாளர்கள் இனிமேல் உரிய அனுமதியை பெற வேண்டும்.
இதன்படி, புனரமைப்புக்கு பின்னர், குடியிருப்பாளர்கள் முன்னர் செலுத்திய அதே வாடகை தொகைக்கு மீண்டும் வீட்டை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு.
அவ்வாறு இல்லையெனில், புதிய வீடுகளை வாடகைக்கு பெற அவர்களுக்கு உதவி வழங்கப்படும்.