News

கனடாவின் ஸ்டீல் வரிகள் WTO விதிகளை மீறுகிறது: சீனா குற்றச்சாட்டு

கனடா சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் ஸ்டீல் (உலோகம்) மீது 25% வரி விதித்ததை சீனா கடுமையாக கண்டித்துள்ளது.

இது உலக வாணிப அமைப்பு (WTO) விதிகளை மீறுவதாகவும், உலக வர்த்தக ஒழுங்கை சீரழிக்கும் வகையில் இருப்பதாகவும் சீனாவின் ஒட்டாவா தூதரகம் தெரிவித்துள்ளது.

கனடா பிரதமர் மார்க் கார்னி, ஜூலை மாத இறுதிக்குள் சீனாவில் உருகிய ஸ்டீலை கொண்ட எந்தவொரு நாடு மூலமாக இருந்தாலும் 25% வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இது, அமெரிக்கா விதித்த 50% ஸ்டீல் வரிகளால், சீனாவின் ஸ்டீல் கனடாவில் “dump” செய்யப்படுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

2024-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே C$120 பில்லியன் மதிப்பில் வர்த்தகம் நடந்தது. ஆனாலும் சமீபகாலத்தில் இருநாடுகளும் மாறுபாடுகளை எதிர்கொண்டுள்ளன.

கடந்த மாதம், கார்னி மற்றும் சீன பிரதமர் லீ கியாங் இரு நாடுகளும் வர்த்தக பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டிருந்தனர்.

அதேவேளை, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின் வாகனங்கள் மீது கனடா 100% வரி விதித்து, அதன் விற்பனையை குறைத்தது. இதற்கு பதிலாக சீனா $2.6 பில்லியன் மதிப்பிலான கனடிய வேளாண்மைப் பொருட்கள் மீது வரி விதித்து எதிர்வினை அளித்தது.

சீனா கூறுகையில்: “இந்த ஏற்றுமதி தடைகள் நியாயமற்றவை. அவை சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான பொருளாதார உறவைப் பாதிக்கும். ஆனால் கனடா இந்த தகராறான நடவடிக்கைகளை நிறுத்தினால், சீனாவின் பதிலடி நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top