Canada

கனடாவில் அறிமுகமாகும் தீபச்செல்வனின் சயனைட் நாவல்

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவலின் அறிமுக நிகழ்வு கனடாவில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வானது, எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 3மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு, 80 TRAVAIL ROAD, UNITS 1 & 2, MARKHAM, ON L3S 3J1 எனும் முகவரியில் அமைந்துள்ள CTCC BUSINESS CENTER மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நிஜக் கதையை தழுவிய வீரகாவியத்தின் துயரமாக அமையப்பெற்ற இந்த நாவல் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு இடையில் மறுபதிப்பையும் கண்டு வரவேற்பைப் பெற்று வருகின்றது.

கனடாவில் அறிமுகமாகும் தீபச்செல்வனின் சயனைட் நாவல் | Cyanide Novel Debuts In Canada

கடந்த சனவரி 03ஆம் நாள் சென்னையிலும் கடந்த மார்ச் 29ஆம் நாள் கிளிநொச்சியிலும் ஜூன் 15ஆம் திகதி லண்டனிலும் வெளியீடு கண்ட பெருங்களங்கள் கண்ட ஈழத்தளபதியின் கதையான தீபச்செல்வனின் சயனைட் எழுச்சியும் வீழ்ச்சியும் கண்ட ஈழத் தமிழ் வரலாறு குறித்த நாவல் ஆகும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top