Canada

கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விதிமுறை

கனடாவில் (Canada) கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் சொந்தத் தேவைகளுக்காக தங்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்க வேண்டிய தொகையை கனடா அரசு உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் சொந்தத் தேவைகளுக்காக கனடாவில் யாரையும் சார்ந்திருக்காமல், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக அவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்றொரு விதி உண்டு.

அந்தத் தொகை 10,000 டொலர்களாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் அதை 20,635 டொலர்களாக உயர்த்தியது.

இந்நிலையில், அந்த தொகையை மீண்டும் உயர்த்தி தங்கள் வங்கிக்கணக்கில் 22,895 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை, கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, ஜூன் மாதம் 2ஆம் திகதி வெளியிட்டுள்ளது.

ஆக, 2025ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி, அல்லது அதற்குப் பின் கனடாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், இனி தங்கள் வங்கிக்கணக்கில் 22,895 டொலர்கள் வைத்திருக்கவேண்டும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top