Canada

கனடாவில் நேருக்கு நேர் மோதிய இரு விமானங்கள் : இருவர் உயிரிழப்பு

கனடாவில் விமானப் பயிற்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மனிடோபா (Manitoba), ஸ்டெயின்பாக்(Steinbach) பகுதியில், விமானம் ஓட்டும் பயிற்சி மையம் ஒன்றில், குறித்த இருவரும் தனித்தனியாக விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, வின்னிபெக்கில் (Winnipeg) இருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில், தெற்கு விமான நிலையம் அருகே இருவரும் விமானத்தைத் தரையிறக்க முயன்றவேளை, 400 மீற்றர் உயரத்தில் இருவரின் விமானங்களும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்துக்குள்ளான விமானங்கள் தீப்பிடித்ததில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், கனடா போக்குவரத்து பாதுகாப்புச் சபை விசாரணைகளை நடத்தி வருவதாக, வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top