Canada

கனடா விமான நிலையங்களில் குண்டு மிரட்டல்கள்

கனடாவின் (Canada) பல்வேறு விமான நிலையங்களில் நேற்று வெடி குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, பெருமளவான விமானங்கள், தாமதமாகவே சேவையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவா, மொன்றியல், எட்மொன்டன், வின்னிபேக், கல்காரி மற்றும் வான்கூவர் ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களுக்கே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏர் கனடா (Air Canada) விமான நிலையங்களின் வலைத்தளத்தில், ஏராளமான விமானங்களில் புறப்படும் நேரங்களில் ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாக கனேடிய தகவல்கள் கூறுகின்றன.

குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பிலான பின்னணி குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இதேவேளை, ஒட்டாவா காவல்துறையினர் நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தில் நடந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக அறிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top